மணிரத்னம் பார்க்க
விரும்பிய படம்?
விரும்பிய படம்?
ஈழப்பிரச்சனையில் மணிரத்னத்தின் பார்வை என்ன என்று யாராவது ஈழ
ஆதரவாளர்களிடம்
கேட்டால் ஒரு பட்டிமன்றமே வைக்கிற அளவுக்கு முழங்கி தீர்ப்பார்கள்.
அப்படிப்பட்டவர் தேன்கூடு என்ற படத்தை விரும்பி பார்க்க ஆசைப்பட்டாராம்.
சில தினங்களுக்கு முன் அவருக்காக படத்தையும் திரையிட்டார்கள்.
ஈழப்போராளி குட்டிமணியின் மரண வருடத்தில்
துவங்கி, முள்ளிவாய்க்கால் சம்பவம் நடந்த நாளன்று முடிவதாக
உருவாக்கப்பட்டுள்ள இக்காதல் கதையில் ஈழப்பிரச்சனை மிக தீவிரமாக
அலசப்பட்டுள்ளதாம். இப்படத்தை இகோர் இயக்கியிருக்கிறார்.
இதை ஏன் மணி விரும்பி பார்க்க நினைத்தார்
என்பதுதான் விசித்திரமாக இருக்கிறது. இவர் விரும்பியது இருக்கட்டும்,
படத்தை உலக தமிழர்கள் அத்தனை பேரும் எதிர்பார்த்துக் காத்துக்
கொண்டிருக்கிறார்களாம்.
வெளிநாட்டு ரிலீஸ் உதவி செந்தமிழன் சீமான் என்பது உபரித்தகவல்.
No comments:
Post a Comment