துப்பாக்கி படப்பிடிப்பில்
விஜய்க்கு அடி!
அவங்களுக்கென்ன? கோடி கோடியா சம்பளம் வாங்குறாங்க என்ற வயிற்றெரிச்சல் தாங்கிக் கொண்டுதான் வித்தை காட்டிக்
கொண்டிருக்கிறார்கள் எல்லா ஹீரோக்களும். அப்படி வயிறெரிந்தவர்களே அதையும்
ஒரு கட்டத்தில் வாபஸ் வாங்கிக் கொள்கிற அளவுக்கு சில சம்பவங்கள் நடக்கும்.
ஆக்ஷன் பட ஹீரோக்கள் வாழ்வில் அன்றாடம் நடக்கும் இந்த சம்பவம், இன்று
விஜய்க்கும் நடந்திருப்பது அவரது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை
ஏற்படுத்தியிருக்கும். வேறொன்றுமில்லை, லண்டனில் துப்பாக்கி படப்பிடிப்பில்
விபத்து ஏற்பட்டிருக்கிறது. காலில் பலத்த அடிபட்டிருக்கும் நிலையில்
மருத்துவ மனையில் சிகிச்சை எடுத்து வருகிறாராம் அவர்.
ஒரே மாதிரி கதை, ஒரே மாதிரி நடிப்பு, ஒரே
மாதிரி சண்டை, சிரிப்பு என்று தலை வகிடை கூட அவர் மாற்றிக் கொள்வதில்லை
என்ற குற்றச்சாட்டையெல்லாம் தகர்த்தெறிந்துவிட்டு தொடர்ந்து கலெக்ஷன்
ஹீரோவாகவே இருக்கிறார் விஜய்.
சண்டைக்காட்சிகளில் பெரும்பாலும் டூப்
போடுவதில்லை என்பதை கொள்கையாக வைத்திருக்கும் அவருக்கு, இப்படி ஒரு விபத்து
நேர்ந்ததில் வியப்பில்லை.
சீறுற தோட்டாவை வாயில கவ்வுற வயசுதானே... சீக்கிரம் குணமாக பிரார்த்திப்போமாக!
No comments:
Post a Comment