Thursday, June 14, 2012

டி.ஆர்.படத்துக்கு ரஹ்மான் இசை?

                                                            டி.ஆர்.படத்துக்கு
                                                            ரஹ்மான் இசை?
T.Rajendar                                                            உளுந்தம் வடைய உடைச்சா 'மடேல்'னா சத்தம் கேட்கும்? ஆனா உடைக்காத உளுந்தம் வடைக்கு ஒரேயடியா சப்தம் கேட்க ஆரம்பித்திருக்கிறது கோடம்பாக்கத்தில். அது வேறொன்னும் இல்ல. மன்மதன் படத்தின் செகண்ட் பார்ட் எடுக்கப் போகிறாராம் சிம்பு. இப்படத்தின் முதல் பார்ட்லேயே, பார்ட் பார்ட்டாக கழண்டு போன அப்படத்தின் தயாரிப்பாளர் கிருஷ்ணகாந்துக்கு இந்த விஷயம் தெரியுமோ தெரியாதோ?
ஆனால் இதன் பிளானிங் இருக்கே, அது எல்லா ரசிகர்களும் தெரிந்து கொள்ள வேண்டிய இன்ட்ரஸ்ட்டிங் ஏரியா. ஒரு காலத்தில் இசையுலகத்தை கிரங்கடித்துக் கொண்டிருந்த டி.ராஜேந்தரிடம், கீ போர்டு ஆர்ட்டிஸ்டாக இருந்தார் ஏ.ஆர்.ரஹ்மான். சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் இதை சொல்ல தவறுவதேயில்லை டி.ஆரும்.
இந்த மன்மதன் பார்ட் 2 வை தயாரிக்கப் போவது டி.ஆர் என்றும், இப்படத்திற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான் என்றும் இப்போதே கிசுகிசுக்க ஆரம்பித்திருக்கிறார்கள் கோடம்பாக்கத்தில். ரஹ்மான் ஸ்டுடியோவுக்குள் டி.ஆர் நுழைஞ்சா எப்படியிருக்கும்? இப்பவே கண்ணை கட்டுதே!

மணிரத்னம் பார்க்க விரும்பிய படம்?

மணிரத்னம் பார்க்க
விரும்பிய படம்?

                                                              ஈழப்பிரச்சனையில் மணிரத்னத்தின் பார்வை என்ன என்று யாராவது ஈழ Manirathnamஆதரவாளர்களிடம் கேட்டால் ஒரு பட்டிமன்றமே வைக்கிற அளவுக்கு முழங்கி தீர்ப்பார்கள். அப்படிப்பட்டவர் தேன்கூடு என்ற படத்தை விரும்பி பார்க்க ஆசைப்பட்டாராம். சில தினங்களுக்கு முன் அவருக்காக படத்தையும் திரையிட்டார்கள்.
ஈழப்போராளி குட்டிமணியின் மரண வருடத்தில் துவங்கி, முள்ளிவாய்க்கால் சம்பவம் நடந்த நாளன்று முடிவதாக உருவாக்கப்பட்டுள்ள இக்காதல் கதையில் ஈழப்பிரச்சனை மிக தீவிரமாக அலசப்பட்டுள்ளதாம். இப்படத்தை இகோர் இயக்கியிருக்கிறார்.
இதை ஏன் மணி விரும்பி பார்க்க நினைத்தார் என்பதுதான் விசித்திரமாக இருக்கிறது. இவர் விரும்பியது இருக்கட்டும், படத்தை உலக தமிழர்கள் அத்தனை பேரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார்களாம்.
வெளிநாட்டு ரிலீஸ் உதவி செந்தமிழன் சீமான் என்பது உபரித்தகவல்.

Ajith-Arya-Nayanthara in Shooting Spot Stills






பாலா படப்பிடிப்பு பவர் ஸ்டார் ஓட்டம்

பாலா படப்பிடிப்பு
பவர் ஸ்டார் ஓட்டம்

              பவர் ஸ்டார் சீனிவாசனை நேரில் அழைத்து பியூஸ் பிடுங்கி    அனுப்பியிருக்கிறார் டைரக்டர் பாலா.
ஊரே பவர் கட்டில் இருக்கும்போது இவரை மட்டும் வெளிச்சமாக இருக்க விடுமா Power Star Dr.Srinivasanவிதி? அண்மையில்தான் விஜய் டி.வி நிகழ்ச்சிக்கு போய் அவமானப்பட்டு திரும்பினார். இப்போது பாலாவிடம்! இவர் இயக்கிக் கொண்டிருக்கும் 'பரதேசி' படத்தில் ஒரு முக்கியமான காட்சியில் நடிக்க வைக்கலாம் என்று பவர் ஸ்டாரை அழைத்தாராம் பாலா.
போக வேண்டிய இடம் சிங்கத்தின் கூண்டு என்பதே புரியாமல் தனது சேனை பரிவாரங்களுடன் ஷுட்டிங் ஸ்பாட்டுக்கு போய் சேர்ந்தாராம் பவர். இந்த லட்சணத்தில் லேட்டஸ்ட்டாக இவரிடம் அடைக்கலமாகியிருக்கும் துணை நடிகைகள் சிலரும் இந்த கோஷ்டி கானத்தில் இருந்தார்களாம். அவ்வளவுதான், பாலா ஃபேஸ்கட்டுக்கு பயங்கர நோஸ்கட்!
நேரடியாக இவரை நொங்கெடுக்காமல் ஸ்பாட்டில் நடித்துக் கொண்டிருந்த இன்னொரு துணை நடிகரை கசக்கி பிழிந்து கதற வைத்தாராம். இதை கண்ணெதிரே கவனித்த பவர், துண்டை காணோம், துணியை காணோமென்று பரிவாரங்களோடு ஓட்டமெடுத்தாராம். 'எங்கய்யா அவரு?' என்று பிற்பாடு பாலா கேட்க, 'அவருதான் அப்பவே ஓடிட்டாரே' என்றார்கள் அசிஸ்டென்டுகள்.
யாருகிட்ட வந்து?

துப்பாக்கி படப்பிடிப்பில் விஜய்க்கு அடி!


துப்பாக்கி படப்பிடிப்பில்
விஜய்க்கு அடி!


Thuppakki



அவங்களுக்கென்ன? கோடி கோடியா சம்பளம் வாங்குறாங்க என்ற வயிற்றெரிச்சல் தாங்கிக் கொண்டுதான் வித்தை காட்டிக் கொண்டிருக்கிறார்கள் எல்லா ஹீரோக்களும். அப்படி வயிறெரிந்தவர்களே அதையும் ஒரு கட்டத்தில் வாபஸ் வாங்கிக் கொள்கிற அளவுக்கு சில சம்பவங்கள் நடக்கும். ஆக்ஷன் பட ஹீரோக்கள் வாழ்வில் அன்றாடம் நடக்கும் இந்த சம்பவம், இன்று விஜய்க்கும் நடந்திருப்பது அவரது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும். வேறொன்றுமில்லை, லண்டனில் துப்பாக்கி படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டிருக்கிறது. காலில் பலத்த அடிபட்டிருக்கும் நிலையில் மருத்துவ மனையில் சிகிச்சை எடுத்து வருகிறாராம் அவர்.
ஒரே மாதிரி கதை, ஒரே மாதிரி நடிப்பு, ஒரே மாதிரி சண்டை, சிரிப்பு என்று தலை வகிடை கூட அவர் மாற்றிக் கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டையெல்லாம் தகர்த்தெறிந்துவிட்டு தொடர்ந்து கலெக்ஷன் ஹீரோவாகவே இருக்கிறார் விஜய்.
சண்டைக்காட்சிகளில் பெரும்பாலும் டூப் போடுவதில்லை என்பதை கொள்கையாக வைத்திருக்கும் அவருக்கு, இப்படி ஒரு விபத்து நேர்ந்ததில் வியப்பில்லை.
சீறுற தோட்டாவை வாயில கவ்வுற வயசுதானே... சீக்கிரம் குணமாக பிரார்த்திப்போமாக!
























கிருஷ்ணவேணி பஞ்சாலை

கிருஷ்ணவேணி பஞ்சாலை


'பஞ்சும் நெருப்பும் பற்றிக் கொள்ளுமே பக்கத்தில் வைத்தால்...' அப்படி பஞ்சும் நெருப்பும் சேர்ந்து பஞ்சாலையையே கொளுத்தப் போகிறது என்று நினைத்து படம் பார்ப்பவர்களுக்கு செமத்தியான ஜர்க். சம்பள உயர்வு, போனஸ், ஸ்டிரைக், என்று வேறு திசையில் நகர்கிறது படம். ஆசை ஒன்றாகவும் அடைவது இன்னொன்றாகவுமே இருக்கிறது சில புது இயக்குனர்களின் அட்டம்ட். தனபால் பத்மநாபனும் அந்த சாபத்திற்கு தப்பவில்லை.
முதல் ஐந்து நிமிடங்களில் அப்படியொரு பிரமிப்பு. பழங்கால பெரிசுகளின் கோபமும், முடிவும் எப்படியிருக்கும் என்பதை அந்த ஒரு முதலாளியின் துப்பாக்கி டுமீலில் சொல்லிவிடுகிறார் தனபால். 'ஃபாரின்லேர்ந்து என் புள்ளை வரணும். என் மில்லை அவன்தான் நடத்தணும்' என்று செத்துப்போகும் கிழவரின் ஆத்மா சாந்தியடைகிற அளவுக்கு மகன் மில்லை நடத்துகிறாரா என்ற பெருங்கேள்வியுடன் நகர்கிறது படம்.
டீன் ஏஜ்கள் திரியும் மில். அங்கே திகட்ட திகட்ட வழிகிறது ஜொள். அதிலும் மேனேஜர் சண்முகராஜா கையில் சாக்லெட்டும், கண்ணில் கட்லெட்டுமாக பிள்ளைகளை 'வளைக்க' போராடுகிறார். இங்கேதான் தன் நிஜக் காதலை காப்பாற்றிக் கொள்ளவும் போராட வேண்டியிருக்கிறது நந்தனாவுக்கு. (பொண்ணு அழகுன்னு ஒரு வரியில சொன்னா ஏழேழு ஜென்மத்துக்கும் நம்மை பாவம் துரத்தும். அப்படி வெறித்தனமாக து£ண்டில் போட்டு, இரை முழுங்குது இவரது எல்லா அம்சங்களும்)
ஜாதி வெறி பிடித்த அம்மா கையால்தான் தன் அக்கா கொலை செய்யப்பட்டாள் என்பதையே அப்புறம்தான் புரிந்து கொள்கிறார் நந்தனா. அம்மாவையும் அதே ஜாதி வெறிக்கு பலி கொடுத்துவிட்டு நகரத்தை நோக்கி நகரும் நந்தனா, தனது காதலனுடன் மறுபடியும் ஊர் திரும்பும்போது நடைபெறும் நிகழ்வுகள்தான் க்ளைமாக்ஸ். இடையில் மில் ஸ்டிரைக், ஊழியர்களின் போராட்டம், வறுமை என்று காதருகில் சங்கு ஊதுகிறார்கள். இருந்தாலும், தொழிலாளி வர்க்கம் தன் தலையில் தானே மண்ணள்ளி போட்டுக் கொள்வதை இதைவிட சிறப்பாக யாராலும் சொல்லவே முடியாது. அதிலும் வசனங்களில் அப்படியொரு கூர்மை.
'சில வரலாற்று தோல்விகளை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் கொண்டதுதான் நம்ம இயக்கம்' என்று அந்த தோழர் சொல்கிறபோது தியேட்டரே விழுந்து விழுந்து சிரிக்கிறது.
வசந்த் அண்கோ விஜய்யை ஜெராக்ஸ் எடுத்ததை போல இருக்கிறார் ஹீரோ ஹேமச்சந்திரன். அவருக்கே வேலையில்லையாம், அதில் இவர் வேறு... இவருடைய தோழர்களாக நடித்திருக்கிற எவரும் மனதில் ஒட்டவில்லை, அஜயன் பாலாவை தவிர. கடைசியில் ஜோதிடராக மாறிவிடும் அஜயனின் முடிவு வெகு யதார்த்தம்!
எந்நேரமும் ஒரு அஜீரண அவஸ்தையோடு இருக்கிறார் ரேணுகா. மகளின் ஜாதி மாறிய காதலுக்கு பிறகு அப்படியானார் என்றால் கூட ஒரு லாஜிக் இருக்கிறது. இங்கே அதுவும் இல்லையே?
நம்மை ஒரேயடியாக வசீகரித்துக் கொள்கின்றன எல்லா பாடல்களும். ஆலைக்காரி பஞ்சாலைக்காரியில் புதைந்து போகிற நாம், பின்னாலேயே வரும் ஆத்தாடி... க்கு அடிமையாகிப் போகிறோம். ரஹ்நந்தன் இசை வாழ்க.
பகல் காட்சிகளை கூட நைட் எபெக்டில் எடுத்து சோதித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.
காதல் ரிலீசுக்கு பிறகு சுமார் ஒரு டசன் பரத்-கள் 'ஞே ஞே' என்று தலையை சொறிந்து கொள்கிற க்ளைமாக்ஸ்கள் கோடம்பாக்கத்தை குதறி எடுத்திருக்கின்றன. அந்த வரிசையில் இந்த படத்திலும் ஒரு மாரியம்மாள். சே, போங்கப்பா...
தமிழ்சினிமா இதுவரை காணாத களம் இந்த பஞ்சாலை. அழகான பஞ்சைக் கொண்டு புடவை செய்வார்கள் என்று எதிர்பார்த்துப் போனால், மொத்தமாய் பெருக்கி அள்ளி தலையணைக்குள் திணித்திருக்கிறார்கள்.